Nivetha Pethuraj aces Formula Car Race Training!

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் ! தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் , நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார். “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது... கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல் “Dodge Challenger” ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். UAE நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேக...