ஆஹா ஒரிஜினல் படைப்பு 'குத்துக்கு பத்து' வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு*
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்குப் பத்து’ வலைத்தளத் தொடருக்காக வித்தியாசமான முறையில் ‘குத்து’விட்டு விளம்பரப்படுத்தும் படக்குழுவினர். ‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தொடரைப் பிரபலப்படுத்துவதற்காக குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு ’ என்ற வித்தியாசமான உத்தியை கையாண்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பை கவனிக்க, மதன் குமார் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகியிருக...