நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான் – நடிகர் விஷால்
பொதுவாகவே திருட்டு வீடியோவை பிடிக்காது இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது இறங்கி அடிப்பேன் – நடிகர் விஷால் விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் #லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார். அவ்விழாவில் கலந்து கொண்ட லத்தி படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது : நடிகர் விஷால் பேசும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல, வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான்.. என்று பேச்சை ஆரம்பித்தார். #லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது வழக்கமாக நடக்கும் விஷயம். சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் ம