Posts

Showing posts from December 1, 2024

சைலண்ட் திரைப்பட விமர்சனம்

Image
  SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை  வசனத்தில் இன்று தமிழகமெங்கும்  வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட்.  முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது.  ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா?  அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பது தான் சைலண்ட் திரைப்படம்.  சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருப்பது அழகு.  இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒர...