Grand Robber Audio Launch held !

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட " ராபர் ” படத்தின் இசை வெளியீட்டு விழா! பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது : முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது: எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை...