Muddy, a treat for racing action lovers!
“ மட்டி” ரேஸ் காட்சிகளை விரும்பும் ஆக்சன் ரசிகர்களுக்கான படம். பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் “மட்டி”. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கதை மிகவும் எளிமையானது. அண்ணன் தம்பி இருவரும் ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன் உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார் என சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் ஜெயித்து எப்படி வெல்கிறார்கள் என்பதே படம். ஹாலிவுட்டில் மட்டுமே இது மாதிரியான ரேஸ் காட்சிகளின் பிரமாண்டத்தைப்பார்த்திருக்கிறோம். தமிழில் இதைப் பார்க்க அழகாக இருக்கிறது. இந்தியாவின் முதல் மட்டி ரேஸ் படமாக வந்திருக்கிறது இந்த மட்டி. மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, ஆனால் அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக...