தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி" பாடல் வெளியீட்டு விழா !

தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் IAS சிவகாமி பேசியதாவது... அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊரிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு அழுது விட்டார், அத்தனை உணர்வு மிக்கதாக அவர் பாடல் இருந்தது. அதே போல் இப்போது அறிவு இருக்கிறார். அவரே பாடல் எழுதி, நடனமாடி, மெட்டமைத்துப் பாடி உலகமெங்கும் கொண்டு செல்கிறார். இவர் சுயம்புவாக வளர்ந்திருக்கிறார். இவரைப்போல் எத்தனை பேரால் கமர்ஷியல் ஆல்பம் கொண்டு வர முடியும். மிகச்சிறப்பான ஆல்பத்தின் மூலம் உணர்வுகளில் மாற்றம் கொண்டு வர முடியுமென...