"டிக் டாக்" சூப்பர் ஸ்டார் ஜி.பி.முத்து பாராட்டிய "ஜோதி" திரைப்படம்.

தாய்மையை போற்றும் "ஜோதி" ஜூலை 28 முதல் திரையில். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜோதி. மிகப்பெரிய சஸ்பென்ஸ் திர்லர்ரோடு சேர்ந்து அமைந்திருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு. இந்த ஜோதி திரைப்படத்தை "டிக் டாக்" பிரபலமான ஜி . பி முத்து அவர்கள் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினர்களையும் வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தில் சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கின்றது என்றும் அது இதுதான் என்று நம் கணிக்கையில் அது இல்ல அப்படின்னு நம் கவனத்தை வேறு மாதிரி திசை திருப்புகின்றது இந்த படம் என்று ஜோதி படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் 11ஆயிரம் குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள் அதில் இன்றைக்கு வரைக்கும் 10800 குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றும் அதிர்ச்சியான ஒன்றும் தான். மேலும் இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதை தான் குழந்தைகளை கடத்திவிற்கும் கும்பல் இன்று அதிகமாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம் தான் என்றும் கூறினார் ஜி பி முத...