Team Bun Butter Jam at pre release event !

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. . இந்த நிகழ்வில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, : இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும். அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கு தான் நன்றி சொல்லணும்.. ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன்....