Posts

Showing posts from August 12, 2024

பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! - தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட்

Image
  வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டது, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று 10 நாட்களை கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கிறோம். பேச்சி படம் சிறியவர்கள...

ZEE5, மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான 'கியாரா கியாரா' ஸ்னீக் பீக்கை வெளியிட்டது !

Image
  இந்தியா, 09 ஆகஸ்ட் 2024: மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ZEE5 அதன் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம்,  மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள 'கியாரா கியாரா' சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9 அன்று நடந்த ஷோகேஸ், இந்த சீரிஸின் அறிமுகத்தை வெளிப்படுத்தி, பிரமிக்க வைக்கும் முன்னோட்டத்தை வழங்கியது.  மும்பையின் மிகவும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றின் பின்னணியி...