Posts

Showing posts with the label Oscars

Suriya's Jai Bhim enters Oscars race of 94th Academy Awards!

Image
 *ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !* 2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்ப...