வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்விழாவினில் எடிட்டர் ஆண்டனி பேசியதாவது … “ இந்த படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது.., “ இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்தது பெருமையாக இருக்கிறது. இது எனது முதல் படம், ஆனால் அதை பற்றிய பதட்டம் எனக்கு வராமல் இருந்ததற்கு தயாரிப்பாளர் ஐசர் கணேஷ், இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. நடிகர் நீரஜ் மாதவ் கூறியதாவது.., “ இ...