Samudrakani lauds Writer team's efforts!
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின், சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப், கலை இயக்குனர் ராஜா, எடிட்டர் மணி, ரைட்டர் சந்தோஷ், கவிஞர் முத்துவேல், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி , யு எம் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா .ரஞ்சித் பேசியவை , தயாரிப்பாளர் அதித்தி என் ரசிகையாக என்னை சந்தித்தார் .காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார் .பிறகு ரைட்டர் படத்தை பற்றி பேசி இப்படத்தை தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தார் .ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதித்திக்கு சமூக அக்கறை உள்ள ப...