அத்தலட்டிக்க் வீரர்களை மதிக்கிறேன் – நடிகர் ஆதி
ஒரு கால் இழந்த கேரக்டரில் ‘கிளாப்’ படத்தில் நடித்தது திரில்லாக இருந்தது என்றார், நடிகர் ஆதி. மன அழுத்தத்துடன் கூடிய நபரின் கதாபாத்திரம் என்று இப்படத்தின் கதையை கேட்கும் போது பிடித்திருந்தது. அதைவிட நடிக்கும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஆழமாக தெரிந்து கொண்டு அவங்க வாயால் கேட்டு தெரிந்துக் கொண்டு நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. லிங்குசாமி இயக்கத்தில் வில்லனாக #வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சேலஞ்சிங் ஆன கதையை தான் நிதானமாக தேர்ந்தெடுக்கிறேன். அதற்கு மொழி ஒரு தடை இல்லை. நான் எப்போதும் மொழியை சார்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய மாட்டேன். எனக்கேற்ற வசதியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால் நான் வெறும் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்துக் கொண்டிருப்பேன். அது என்னை சலிப்படைய செய்யும். அப்படி ஆகாமல் இருக்க, எனக்கு நானே சவால் விடும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அடுத்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் #பார்ட்னர் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். நகைச்சுவை அனைத்து தரப்பினருக்கும் சென்று சேரும். இப்படத...