Yogi Babu, Oviya starrer Contracter Nesamani launch with pooja!
* யோகி பாபு, ஓவியா நடிக்கும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படப்பிடிப்பு துவக்கம்* அன்கா புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் யோகிபாபுவும், நடிகை ஓவியாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.. யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது. அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர். இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ...