Posts

Showing posts from November 27, 2024

‘விடுதலை 2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.   ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே வந்து நிறைய பேசுகிறார், காதல் செய்கிறார், ஆக்‌ஷனும் உண்டு. ராஜா சாரின் இசைக்கு நான் இயக்கம் செய்ய ஆசைப்படுகிறேன். அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமாறன் மனதில் திரையிட்டு இப்போது நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள்” நடிகர் சேத்தன், “இந்தப் படத்தின் பார்ட்1 பார்த்துவிட்டு என்னைத் திட்டாதவர்களே கிடையாது. அந்தப் பாராட்டு எல்லாம் வெற்றிக்குதான் சேரும். படம் பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு ராஜா சார் பாராட்டியதை மறக்க மாட்டேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழி...

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன்,  ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் - ஹரி‌ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண...