ப்ரின்ஸ்’ படப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ’ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யூடியூபரும் நடிகருமான ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல் பேசியதாவது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அனுதீப் சார், சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. உண்மையிலேயே இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். பல வருடங்களாக நானும் பாரத்தும், உங்களை மோட்டிவேஷனாக பார்த்துள்ளோம் உங்களை சந்திக்க முடியுமா உங்களுடன் நடிக்க முடியுமா என்று எல்லாம் யோசித்து இருக்கிறோம். ஆனால், இன்று உங்களுடன் படம் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு நல்ல ரோல் இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த என்...