என் மனைவிக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு தான் இறுகப்பற்று” ; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம் பிரபு
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ இறுகப்பற்று ’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா என பக்கபலமான தொழில்நுட்ப கூட்டணியும் இணைந்து கைகோர்த்துள்ளனர். வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’ தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி பிரச்சனை நர