Posts

Showing posts with the label Writer

Bharathi Raja lauds Writer!

Image
  ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன்,  தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள் - இயக்குனர் பாரதிராஜா பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்

Samudrakani's Writer to hit screens on Dec 24!

Image
  பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.  தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.  சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.   காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.  ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக ...