Fans flock to Rahman's Malyalam film shoot in Kerala!
நடிகர் ரகுமானை காண கேரள படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள் ! பல மொழிகளிலும் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ரகுமான், கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, அவரை காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர். தமிழ், தெலுங்கு,மலையாளம் பல மாநிலங்களிலும் முன்னணி நடிகராக வலம் வருவபவர் நடிகர் ரகுமான். 1980 களில் நாயகனாக களமிறங்கியவர், தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை தந்துள்ளார். நாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் அசத்தினார். சமீபத்தில் தமிழில் அவர் நடித்த “துருவங்கள் பதினாறு” படம் தந்த வெற்றி, திரையுலகில் மீண்டும் அவரை நாயகானாக முன்னிறுத்தியுள்ளது. தற்போது . மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கும் ரகுமான், பாலிவுட்டின் மூன்று முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான ' கண்பத்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத...