Santhanam's Sabhaapathy readies for release!

RK Entertainment சார்பில் R. ரமேஷ்குமார் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலகல காமெடியில், கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் சபாபதி. வரும் நவம்பர் 19 திரையில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படபிரபலங்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது. *இவ்விழாவில் நடிகர் புகழ் பேசியதாவது…* இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே மிக சுவாரஸ்யமான அனுபவம். விஜய் டிவியில் ஒரு ஷீட் முடித்து விட்டு, வந்து கொண்டிருக்கும்போது நண்பனிடம் இது தான் சந்தானம் அண்ணா ஆபிஸ் என சொல்லிக்கொண்டிருந்தேன், சரியாக அதே நேரத்தில் சந்தானம் ஆபிஸில் இருந்து போன் வந்தது. எப்போது ஆபீஸ் வர முடியும் என கேட்டார்கள் நான் கீழ தான் இருக்கிறேன் என சொன்னேன் அவர்கள் நம்பவில்லை பின்னர் மேலே ஆபிஸ் சென்றவுடன் ஆச்சர்யப்பட்டார்கள். சந்தானம் அண்ணா படத்தில் நடிப்பது எனக்கு ஆசிர்வாதம். எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தேன். சந்தானம் அண்ணா நான் கார் வாங்கிய போது என்னை அழைத்து பாராட்டி, ஒரு கடவுள் சிலை தந்தார். எனக்கு சாமியை தந்தத...