Posts

Showing posts from August 13, 2022

விருமன்’ வெற்றிக்காக கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

Image
கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது.  இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.   கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான 'விருமன்' வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை

Image
கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.  மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொ டக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.  முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக் குழுவினரும் தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.  ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர். வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தப்படம் நேரடியாக "ஆஹா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தநிலையில் படத்தின் நாயகன் வெற்றி  இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  “எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  சீர

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை சீதாராமம் : துல்கர் சல்மான் பேச்சு

Image
 ' சீதாராமம்' படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன் வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'சீதா ராமம்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் 'சீதா ராமம்' பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினர்.  இவ்விழாவில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் இயக்குநர் ஹனு ராகவபுடி, கதாநாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழில் வெளியிட்ட லைகா நிறுவனத்தில் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் லைகா தமிழ் குமரன் பேசுகையில், ''  சீதாராமம் படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த பட குழுவினருக்கு லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் வாழ்த