ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்ஷன் தமிழ் திரைப்படம் - ரெட் ஃப்ளவர்:

₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX கண்காணிக்கப்படுகிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம், உயர்தர சினிமா வுக்கான தனது மகத்தான பார்வை மற்றும் அர்ப்பணிப்பிற்கு பெயர் பெற்றவர், ரெட் ஃப்ளவர் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்ஷனுடன் கலந்திருக்கும் என்று கூறினார். “உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும் என்று தயாரிப்பாளர் கே. மாணிக்கம் தெரிவித்தார். இப்படத்தில் ஹீரோ விக்னேஷ் மற்றும் ஹீரோயின் மனிஷா ஜஷ்னானி நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் நடிகர்களான நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ர...