Vadivelu ,Santhosh Narayan in London
* வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்* வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இ...