Jayam Ravi at grand Brother audio launch !

தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் #பிரதர். இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 21.09.2024 நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : பாடலாசிரியை பார்வதி பேசும்போது.. முக்கியமான ஆளுமைகள் இருக்கக்கூடிய இந்த இடத்தில் முதல் ஆளாக பேச கூப்பிட்டதற்கு மகிழ்ச்சி. என்னுடைய மிதக்குது என்ற பாடலை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்தப் பாடலில் நானும் தோன்றி இருக்கிறேன். யாராவது கண்டுபிடித்தீர்களா என்று தெரியவில்லை. அதேபோல டீசரில் வரும் அமுதா.. அமுதா.. பாடலையும் நான் தான் எழுதினேன். ஹாரிஸ் சாருடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பை மிகப்பெரிய பேராக நினைக்கிறேன். மறைந்த எனது அப்பாவின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இதை நான் அவரிடமே கூறியிருக்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் என்னை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார். ஹாரிஸ் சார், ராஜேஷ் மற்றும் ஒட்டுமொத்த பல குழுவினருடன் பணியாற்றியது மிகவும் நிறைவாகவும் சௌகரியமாகவும் இருந்த...