Posts

Showing posts from June 12, 2023

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் திரைப்படம் “BP180” இனிதே துவங்கியது!

Image
  பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!  ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”.  இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது.  இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது…  இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது… அதுல் சார்,  ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம் நன்றி.  நடிகை நைனி சாவி பேசியதாவது… எனக்கு இந்தவாய்ப்பு தந்ததற்கு ஜேபி சார் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த

தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன்  பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது,  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளோம். தொடர்ந்து

மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி

Image
  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் அம்சங்களுடன் முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் ப