Posts

Showing posts from July 23, 2023

நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது!

Image
  சென்னையில்  அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஹாரத்தி கணேஷ், கணேஷ்கர், அஜய்ராஜ், உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது மதிப்புமிக்க வருகையால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஹப்பின் நிறுவனரான நாசர் சார் என்னுடைய குடும்ப நண்பர். அவரது இந்த சாதனையை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தனது அணுகுமுறையில் ரொம்பவே அப்டேட்டாக இருப்பதுடன் இளைஞர்களின் நாடித்துடிப்பையும் நன்கு

சினிமா டுடே' வின் சர்வதேச டிஜிட்டல் கண்காட்சியில், 69-ஆண்டு பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் புத்தக விற்பனை மையம்!*

Image
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் பெயரில் உள்ள சினிமா ஆர்வலர்களின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு ஊடகம், சினிமா மற்றும் அதன் ஒலி , ஒளிபரப்புகளுக்கு  தேவையான கேமிரா முதல் லேட்டஸ்ட் டிஜிட்டல் சாதனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை வெற்றிகரமாக நடத்தி வருவது நாம் அறிந்ததே.  அந்த  பிரமாண்ட விற்பனை கண்காட்சி., இந்த ஆண்டும் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி வெள்ளி முதல் 23 ஆம் தேதி  ஞாயிறு வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 69- ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தகம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது இதில், தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை சினிமா தொடர்பான புத்தகங்கள், திரையுலக பிரபலங்கள் எழுதிய கவிதை மற்றும் சிறுகதை புத்தகங்கள், பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சினிமா பற்றியும், திரையுலக பிரபலங்கள் பற்றியும் எழுதிய புத்தகங்கள், திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் எழுதிய திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், திரைப்பட வியாபாரம் சார்ந்த புத்தகங்கள் ... என சினிமாத்துறையின் அனைத்து தகவல்களையும் கொண்ட பல புத