Grand trailer launch of Sila Nerangalil Sila Manithargal !
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா ! தினசரி வாழ்வில் இயல்பான 4 இளைஞர்கள் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள், அவர்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை, சொல்லும் அழகிய திரை அனுபவமாக உருவாகியுள்ளது “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம். AR Entertainment சார்பில் அக்பர், அஜ்மல் கான் & ரேயா தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்படத்தை வழங்குகிறார். அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன், நடிகை பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன், ஆகியோருடன், நாசர், KS.ரவிக்குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு திருவிழா நடிகர் கமலஹாசன் முன்னிலையில் திரைபிரபலங்கள் இயக்குநர் வெற்றிமாறன், ராஜேஷ் M செல்வா, KS.ரவிக்குமார், கஸ்தூரி ராஜா, பிரபு சாலமன் உட்பட பல திரைநட்சத்திரங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவில்.. * தயாரிப்பாளர் ரேயா பேசியதாவது…* இப்படத...