சைலண்ட் பட இசை வெளியீடு !

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்...