Posts

Showing posts with the label vadivelu

மீண்டும் இணைந்திருக்கும் இயக்குநர், நடிகர் பிரபுதேவா மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணி !

Image
  தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன்  தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.  தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்தவர்  வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின்  எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி வந்துள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி க...

Vadivelu emotional as he returns to cinema with Lyca Film!

Image
  என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும் - 'வைகைப்புயல்' வடிவேலு. 'எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார். ( See  speech video ) லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,'' கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன்...