Parvathi Nair issues statement!

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...! கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரைகளும், காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற்கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20. 10. 2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளை பெறுவதற்காக சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போசை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில் எங்களுடைய வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளின் பராமரிப்பாளராகவும் இருந்தார். திருட்டு சம்பவத்தில் நான் அவர் மீது சந்தேகம் கொள்வதற்கு சரியான காரணம் இருந்தாலும், காவல்துறையில் புகார் அளிப்பத...