Posts

Showing posts from October 31, 2023

ரா ..ரா .சரசுக்கு ராரா...'வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு!

Image
சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்:  'ரா ..ரா .சரசுக்கு  ராரா...' படத்தின் இயக்குநர் கேசவ் தெபுர் பேச்சு! ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும்  படம் 'ரா ..ரா ..சரசுக்கு  ராரா...' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.  கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது, "தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம்  சந்தோஷமாக இருக்க வேண்டும் ,தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது  கத்தி , வெட்டு குத்து, ரத்தம்...

'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு

Image
சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.  இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி...