8 Film annoucement by Abhishek Films!
அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா நடிப்பில் டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன் - கல்யாண் - விப்பின், இயக்கத்தில் 8 புதிய கதையம்சமுள்ள, பிரமாண்டமான படங்கள். பிரபுதேவா நடிப்பில் மூன்று படங்கள், நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள், காஜல் அகர்வால் நடிப்பில் ஒரு படம். தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2ம் பாகம், இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார். சமீபத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கத்தில் சிவப்பு – மஞ்சள் – பச்சை என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றி கூட்டணிய...