Posts

Showing posts from May 9, 2022

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

Image
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஆதார்'. 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.  படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக

கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்*

Image
நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை கிருத்திகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான போராடி வா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது.