Kamal Haasan meets, praises team Sarpatta Parambarai!

' சார்பட்டா பரம்பரை' படத்தின் திரைமொழி ரசிக்கவைக்கிறது. பா.இரஞ்சித்தை பாராட்டிய உலக நாயகன். இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 'சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், எனக்கு தெரிந்தவர்கள் என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள். எனக்கு படம் பார்க்கும்பொழுது அந்த காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது, சார்பட்டா திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது, வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து , மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ...