கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான 'டெவில்' நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL3IoGlVorudoNLfhtKXXBxRS0dgPqNyqhJAZMx7GRuiK6VsliWTXeiY-A2DvYEDvMi13r0n60LN_QuKUbx3jrKrB05tTYkR7JRxzj_0vDY_GK1iouoHmVCCjoCYHYO7xynBzQXi-cE9IEhjM3XQrj08kEdB55gAsOQkRZplNZIivMW3qwDC-7t6N3BUk/s320/IMG-20230808-WA0009.jpg)
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்குகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் 'டெவில்' என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி என்ற கோஷத்துடன் வருகிறது. 'டெவில்' படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இருந்தது. படத்தினைப் பற்றிய புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர்கள் 'நவம்பர் 24 2023 டிகோடிங்' என எழுதப்பட்ட ஒரு வசீகரமான மற்றும் பிரத்யேகமான போஸ்டரை