Chiyaan Vikram in Trichy for Cobra promotions!

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா ! செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் த!யாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவ...