Nadigar Sangam team assumes office
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா ? அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவும். நடிகர் சங்கத்திற்கான கட்டடம் பணிகள் மூன்று மாதத்தில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞர் மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். அதற்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட செய்தியாளர்...