குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

’ சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. என்னுடைய முதல் படமே குடும்பப் படமாக அமைந்துள்ளது. ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி”. கலை இயக்குநர் சுரேஷ் பாலாஜி, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் ஜாலியாக வேலை செய்தோம். உங்களுடைய ஆதரவு தேவை”. எடிட்டர் கண்ணன் பாலு, “’குடும்பஸ்தன்’ எனக்கு ஸ்பெஷல் படம். நன்றாக படம் வந்திருக்கிறது. தியேட்டரில் பாருங்கள்”. ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்ரமணியன், “இயக்குநர் ராஜேஷூடைய கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்களாக நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது. எடிட்டர் கண்ணன் என்னுடைய ...