ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” – அறிமுக இயக்குநர் மீரா மஹதி
ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார். படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு பேசியதாவது... ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் நான் அதற்கு முன்னர் ஒரு டீசர் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். ஏனென்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எந்த கோணத்தில் படத்தை அணுகுகிறீர்களோ, ஆடியன்ஸும் அதே மனநிலையில் தான் அப்படத்தை அணுகுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. மேலும் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதுகின்ற எழுத்து தான் அப்படத்தை மக்களிடம் கொண்ட