Samudrakani in Arun Vijay's AV 33, replaces Prakash Raj !
அருண் விஜய் - ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார். தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய் -ன் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநி யில் பரபரப்பாக நடந்து வருகிறது. சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். #AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார். எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்