வித்தியாசமான களத்தில் நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” டிரெய்லர் !!

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் திரைப்படம் “ஹர்காரா”. இன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லரை, புதுமையான முறையில், தமிழ்நாட்டின் பல அஞ்சல் அலுவலர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தின் வழியே வெளியுட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இப்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது. இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் சொல்கிறது. வில்லுப்பாட்டு கதை மூலம் ஆரம்பிக்கும் டிரெய்லர், காளி வெங்கட் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர் வழியே முதல் இந்திய த...