சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன் !

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார். இசையமைப்பாளார் தமனின் இந்த செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சிறுவர்களுக்காக தற்போது நடந்து வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசனில் தான், நீதிபதியாக கலந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். பொதுவாக பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடுவர்கள் பாடகர்களிடம் இறுக்கமாகவும், கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால், இதற்கு முன்பு கலந்துகொண்ட நீதிபதிகள் போல் அல்லாமல், போட்டியாளர்களோடு மிக எளிமையாக பழகுவது, அவர்களுக்கு ஊக்கம் தருவது, சர்ப்ரைஸ் தருவது, சுவாரஸ்யமான கமெண்ட்கள் தந்து உற்சாகப்படுத்துவது, என அசத்தி வருகிறார் தமன். இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்...