கன்னி' பட விழாவில் கூல் சுரேஷைக் கலாய்த்த இயக்குநர் பேரரசு!
ரசிகர்களே நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் என்று ஒரு பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ். மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே. ராஜன்,இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் கே. ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, "கன்னி என்கிற அற்புதமான தலைப்பு இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கன்னி என்பது பரிசுத்தம் தூய்மை என்ற பொருள்படும். கன்னிப்பெண் கன்னி கழியாதவர்கள் என்றெல்லாம் சான்றோர்கள் அழைப்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலைப்பு வைத்திருக்கிறார், தம்பி மாயோன் ச