லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் 'லேபில்' ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் தினேஷ் பேசியதாவது… இயக்குநர் அருண் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன். அவருடன் இணையும் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும், இது மிகச்சிறப்பான சீரிஸாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி, எடிட்டர் ராஜா ஆறுமுகம் பேசியதாவது… இப்போது 4 எபிசோடு பார்த்திருப்பீர்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சீரிஸாக இல்லாமல் படத்திற்கு மாதிரி தான் உழைத்தோம், முழுக்க முழுக்க ஒரு படத்தைப் போலவே தான் பிரம்மாண்டமாக உருவாக்கினோம். உங்களுக்குக் கண...