வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை தீபா பேசியதாவது, இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக அப்படியே எழுதி எடுத்துள்ளார் இயக்குநர். இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் என்னுடன் ஒரு சொந்த உறவை போலவே பழகினார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர்...