வெலோனி' யார்?'வதந்தி' வலைதளத் தொடரில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் கிரைம் திரில்லரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரில் சஞ்சனா என்ற நடிகை அறிமுகமாகிறார். இவர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும், பார்வையாளர்களிடத்திலும், திரையுலக ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகும் கிரைம் திரில்லர் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. பன்னடுக்கு மர்மங்களுடன் புதிர் தன்மை கொண்ட இந்த க்ரைம் திரில்லர் வலைதள தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் அமேசான் பிரைம் வீடியோ மகிழ்ச்சி அடைகிறது. சந்தாதாரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் பிரைம் வீடியோ தற்போது அதன் அசல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'யை அளிக்கிறது. இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் இயக்கியிருக்கும் கிரைம் திரில்லரான ' வதந்தி...