Gangai Amaran acts in Arun Vijay- Hari's AV33

ஹரி டைரக்ஷனில் AV33 மீண்டும் நடித்த கங்கைஅமரன். பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார். இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார். ஆரம்பத்தில், 1979ல் புதிய வார்ப்புகள் , 80ல் பாமா ருக்குமணி படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரல் கொடுத்தார், கங்கைஅமரன். அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார். சூப்பர் ஹிட் படமான கோழிகூவுது படம் மூலம் டைரக்டராகவும் மாறினார். தொடர்ந்து,எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்கள் டைரக்ட் செய்துள்ளார். அதேபோல், 16 வயதினிலே படத்தில...