Posts

Showing posts from April 30, 2023

"நான் சென்னை பையன்''- 'விரூபாக்‌ஷா’ நாயகன் சாய் தரம் தேஜ்*

Image
''நான் சென்னை பையன் தான். 'விரூபாக்‌ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்'' என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார். தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' விரூபாக்‌ஷா ’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது.  அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'விரூபாக்‌ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'காந்தாரா' புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில்