கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காயிதம்” (SaaniKaayidham) திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ !

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, ஆகியவையுடன் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பில் உள்ள பொருட்களை இணையம் மூலம் தேர்வு செய்யும் வசதியுடன், விரைவாகவும் இலவசமாகவும் நேரடியாக விநியோகம் செய்தல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு உங்கள் பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல...